அடால்ப் ஹிட்லர் என் அம்மாவுடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என மறைந்த பிரபல நடிகை Romy Schneider கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வாதிகாரி ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்தவர் Magda. அவர் கடந்த 1933-ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது Wolf Albach-Retty என்ற நடிகரை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார்.
அடுத்த 4 வருடங்களிலே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரையும் போலவே, அவர்களுக்கு பிறந்த Romy Schneider ஜேர்மனியின் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
அவர் கடந்த 1976-ம் ஆண்டு, இறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக, பத்திரிக்கையாளர் Alice Schwarzer- டம் ரகசியமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த பேட்டி பற்றிய செய்திகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த பேட்டியில், பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும். தன்னுடைய தாய் Magda, ஹிட்லருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்திருந்ததை நினைத்து பெரும் வேதனை அடைந்துள்ளார்.
இது ஒரு புறமிருக்க தன்னுடைய தாயின் இரண்டாவது கணவர் Hans Herbert Blatzheim, அதிகமான முறை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள முயன்றதாக கூறியுள்ளாராம்.
அந்த பேட்டியின் போது, Romy அடிக்கடி அழ ஆரம்பித்ததால் நிகழ்ச்சியில் அதிகமான கட் விழுந்ததாகவும் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.
தன்னுடைய கருப்பு பக்கங்களை பற்றி மட்டுமே பேசியிருக்கும் Romy, எந்த நிலையிலும் நான் கூறியுள்ள ரகசியங்கள் வெளியில் தெரிந்துவிட கூடாது என என்னிடம் தெரிவித்திருந்தார்.
நீண்ட வருடங்களாக Romy-யின் வார்த்தைக்காக தான் அவர் கூறிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறாமல் பாதுகாத்து வந்தேன். ஆனால் அவருடைய கருப்பு பக்கங்கள் நிச்சயமாக பலருக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது வெளியிட உள்ளேன் என பத்திரிக்கையாளர் Alice கூறியுள்ளார்.
மேலும், வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி Franco-German TV-ல் காலை 10 மணிக்கு அந்த பேட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.