Loading...
பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் மும்தாஜ், ஜனனி, யாஷிகா வீட்டிலிருந்து உறவினர்கள் வந்து சென்றனர். இதில் பாலாஜிக்கு மட்டும் வீட்டிலிருந்து பரிசும், கடிதமும் வந்துள்ளது.
கடிதத்தை படித்த பாலாஜிக்கு பெரிதும் அதிர்ச்சியாகவே இருந்தது. நித்யா எழுதிய வரிகள் பாலாஜியின் நம்பிக்கையை உடைத்துள்ளதால் பிக்பாஸ் வீடே சோகத்தில் காணப்பட்டது.
Loading...
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஐஸ்வர்யாவின் தாய் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். இதில் பாலாஜியிடம் ஐஸ்வர்யா குப்பை கொட்டியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
நேற்றைய தினத்தில் நித்யா எழுதிய கடிதத்தில் யாரைப் பற்றியும் யாருடனும் புறம் பேசாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதனை மீறி மறுநாளே ஜனனியைப் பற்றிப் பேசியுள்ளார்.
Loading...