எம்பிலிபிட்டி இரத்தினபுரி பிரதான சாலையில் நடந்த விபத்தில் மரணமடைந்த சிங்களம் இளைஞன் மற்றும் தமிழ் இளைஞன் இருவரின் சடலங்களும் பௌத்த சமய முறைப்படி இறுதி சடங்கு செய்யப்பட்டது.
இவ்விருவருக்குமான இறுதி கிரியைகள் நேற்று (28 ) ஆச்சாரியகம பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இவ் இரண்டு நபர்களும் கொழும்பிலிருந்து அலுவலகம் முடித்துவிட்டு வீடும் திரும்பும் போதே இவ் விபத்து எம்பிலிபிட்டி- இரத்தினபுரி பிரதான பாதையின் கொஸ்வீட்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
அகுணகொலபெலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 2குழைந்தைகளின் தந்தையான 30வயதுடய நாலக இரோஷன் என்பவரும் காலி னெழுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ராஜேந்திரன் சிவகுமார் என்பவரும் இவ் விபத்தில் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த தமிழ் இளைஞன் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன் என்பதோடு அவனின் சடலத்தை வைப்பதற்கு கூட அவனது வீட்டில் இடம் இல்லாததனால், அவனுடைய சடலமும் மரணமடைந்த சிங்கள இளைஞன் வீட்டிலேயே வைக்கப்பட்டது.
மேலும், இருவரின் சடலங்களும் பௌத்த சமயத்தின் முறைப்படி ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜாதி வெறியால் கொலை குற்றம் செய்யும் இந்த காலத்தில் இப்படியொரு சம்பவத்தை கேட்பதும் பார்ப்பதுவுமே சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்.