தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பின்னர் உச்ச இடத்தில் இருப்பவர்கள் என்றால் அது விஜய், அஜித், மாத்திரமே என்பது யாராலும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும்.
இவர்களுக்கு பின்னர் உள்ளவர்களில் சூர்யாவும் முக்கிய இடத்தை பிடித்த ஒருவராகும். இவர்கள் நடிக்கும் படங்களின் வசூல் எப்போதும் மிரள வைக்கும்.
இவ்வாறான நிலையில் குறித்த மூவரினதும், அடுத்த படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
இந்த படங்களின் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளத்தில் எவ்வளவு ரீச் சென்றது என்பது குறித்து ஒரு சில தரவுகள் நடத்தப்பட்டு அதன் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட நாள் முதல் தற்போது வரை 707 கோடி பேரை ரீச் செய்துள்ளது.
அதேபோல் சூர்யான நடிக்கும் NGK படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட நாள் முதல் தற்போது வரை 196 கோடி பேரை ரீச் செய்துள்ளதாம்.
அஜித் நடிக்கும் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் வெளிவந்த அண்மையில் வெளியாகியது. வெளியாகிய 4 நாட்களில் 138 கோடி பேரை ரீச் செய்துள்ளது.
விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் NGK-வை கண்டிப்பாக தாண்டிவிடும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எப்படியிருப்பினும் விஜயின் சர்கார் பட பர்ஸ்ட் லுக்கை இரண்டு படங்களும் தாண்டுவது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது. அது இரண்டு தாண்ட முயற்சிக்கும் போதும் சர்க்கார் மேலும் பல கோடி பேரை ரீச் செய்து விடும் என்பதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.