கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தை இருவருட காலத்துக்கு 8.5 மில்லியன் ரூபாவுக்கு தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க கொழும்பு மாநகர சபை முடிவெடுத்துள்ளது.
இதற்காக கொழும்பு மாநகர சபை கேள்விப் பத்திரத்தைக் கோரியிருந்தது.
மாநகர சபையின் நிதிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அளவுக்கதிகமான தொழிலாளிகளும், கனிஷ்ட மட்ட ஊழியர்களும் இருப்பதாகக் கூறி இந்த முடிவுக்கு மாநகரசபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகரசபையானது 750 மில்லியன் ரூபா மேலதிகப் பற்று வரையறையைக் கொண்ட , 2000 மில்லியன் ரூபா நிலையான வைப்புகளைக் கொண்டுள்ளது
இதற்கு முன்னர் மேயர் வாசஸ்தலத்தை சுத்தப்படும் ஒப்பந்தம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு 6 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனமானது 9 ஊழியர்களை பணிக்கமர்த்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்தாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
.