புத்தளம் கொழும்பு பிரதான சாலையின் அருகிலுள்ள மதுரங்குளி பிரதேசத்தின் அருகில் ஒரு தனிமையான இடத்தில், காலாவதியான மருந்துகள் பாதுகாப்பின்றி வீசப்பட்டு கிடந்துள்ளது. இதை அறிந்த முன்தளம் காவல் நிலைய போலீசார் இதனை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு முடிவுசெய்துள்ளனர்.
குறிப்பிட்ட காலாவதியான மருந்துக்கள் தொகையை தனியார் நிறுவனம் அல்லது தனிப்பட்ட நபர்களால் போடப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
இம் மருந்து தொகையில் காலாவதியான மருந்துகளும் காலாவதியாகாத மருந்துகளும் அடங்குவதாக போலீசார் தெரிவித்த்துள்ளனர். குறிப்பிட்ட மருந்துகளில் நிறுவனத்தின் பெயர்கள் அழிக்கப்பட்ட நிலையில் இம் மருந்துகள் வீசப்பட்டதற்கான காரணம் என்ன வென்று போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
குறிப்பிட்ட மருந்து தொகைகளில் ஒரு மாத்திரை வீதம் எண்ணிப்பார்க்கும் போது 1000 க்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்விடத்திற்க்கு பிரவேசித்த மதுரங்குளி போலீஸ் நிலையத்தின் உயரதிகாரி M.D திரு ரன்வீர் உத்தரவு படி இம் மருந்து தொகைகளை உரம் இடும் பொதியில் இட்டு பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலாவதியான மருந்துகள் சரியான முறையிலேயே அழிக்கப்பட வேண்டும் என்பதால் இம்மருந்துகள் அதிக வெப்பம் கூடிய பகுதியில் எரிக்கப்படும் வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றார்.
மேலும், இக் குற்றத்தை புரிந்தவர்களை விரைவில் கைது செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.