கைத்துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனால் அப்பகுதியை RAiD அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
ஓகஸ்ட் 28, நேற்று Émile-Lemoine Quimper பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தின் வழியாக நபர் ஒருவர் உள் நுழைந்துள்ளார். இதனால் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. RAiD படையின சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு ஆயுத முனையில் நபரினை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அக்கட்டிடத்தில் வசிப்பவர்கள் பலரை வெளியேற்றி, வீதியின் ஓரத்தில் நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். கட்டிடத்துக்குள் நுழைந்த ஆயுததாரியை கண்டுபிடிக்க தாமதம் ஆனது.
நண்பகல் வேளையில் ஆரம்பித்த இந்த தேடுதல் வேட்டை, மாலை வரை நீடித்தது. வீட்டுக்குச் செல்ல முடியாமல் பலர் வீதிகளின் தரித்து நின்றனர். தீயணைப்பு படையினர் அவர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள். இரவு 9.30 மணி கடந்தும் இந்த தேடுதல் வேட்டை நிறைவுக்கு வரவில்லை. அப்பகுதி நகர முதல்வர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளார்.
அதன் பின்னர் தடை விலக்கப்பட்டு குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பச் செய்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும், 8 மணி நேரங்களுக்கு மேலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.