சமுக சீர்கேடு:இந்தியாவில் தனது தங்கையை வற்புறுத்தி மது குடிக்க வைத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பலாம் விஹாரில் உள்ள கார்டர்புரி கிராமத்தில், 10 வயது சிறுமியை சகோதரனே பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை குறித்த சிறுமியின் பெற்றோர் வெளியில் இருந்த சமயத்தில், சிறுமியின் மூத்த சகோதரரான 22 வயது இளைஞர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவர், தனது தங்கையின் அறைக்கு சென்று மதுவை கட்டாயப்படுத்தி சிறுமியை குடிக்க வைத்துள்ளார். பின்னர், சிறுமியை பலமாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சிறுமி கத்தியதால் பயந்து போன குறித்த இளைஞர் தப்பியோடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் இது தொடர்பாக பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், நேற்றைய தினம் தனது உடைமைகளை எடுத்துக் கொள்ள வீட்டிற்கு வந்த இளைஞரை, பொலிசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது போக்ஸா சட்டம் பாய்ந்துள்ளது.