நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா ‘கனா’ படத்திற்காக பாடிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், அப்பாடலை எழுதிய பாடலாசிரியர் ஜி.கே.பி செம ஹாப்பியில் இருக்கிறார்.
சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற “கம் னா கம்” பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய “வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியானது.
இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர்.
“வாயாடி பெத்த புள்ள” பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது.
தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.
இது குறித்து கூறிய ஜி.கே.பி, ”இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்ல தூண்டும் தூண்டுகோள்.” என்றார்.