Loading...
அமெரிக்காவை சேர்ந்த புதுமண தம்பதி கனடாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற நிலையில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
ஸ்டீபன் கிரஹாம் (30) மற்றும் எமி மொபட் (28) ஆகிய இருவருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் புதுமணதம்பதி காரில் கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியாவுக்கு தேனிலவு செல்ல கிளம்பினார்கள்.
அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கிய ஸ்டீபனும், எமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்கள்.
Loading...
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருமணம் நடந்த சில நாட்களில் எமியும், ஸ்டீபனும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள காதல் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டனர்.
அந்த பதிவு அவர்கள் இறப்புக்கு பிறகு வைரலாகியுள்ளது.
Loading...