பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை மியன்மார் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
“சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்ற கருப்பொருளில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகிறது.
பிம்ஸ்டெக் அமைப்பு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக்கொண்ட வலயமைப்பாகும்.
அதேவேளை மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.