Loading...
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய் மகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி – சீனிகம – ஐவ பிரதேசத்தில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மீட்டியாகொட காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading...
தாய் மகளுடன் மேலும் ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களுமே இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.இரகசிய தகவல் ஒன்றுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு எதிராக சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...