01-09-2018 சனிக்கிழமை இன்றைய ராசி பலன்கள். விளம்பி வருடம், ஆவணி மாதம் 16ம் திகதி, துல்ஹஜ் 20ம் திகதி, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 7:09 வரை;
அதன்பின் சப்தமி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:26 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.
மேஷம்:
உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர்ச்சி கூடும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். விருந்து விழாவில் பங்கேற்க அழைப்பு வரும்.
ரிஷபம்:
முரண்பட்ட எண்ணம் கொண்டவர்களிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும்.
திடீர் செலவால் சேமிப்புப் பணம் கரையும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கைத் தரும். தெய்வ வழிபாடு அவசியம்.
மிதுனம்:
பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர புதிய வாய்ப்பு உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.
கடகம்:
வாழ்க்கைத் தரம் உயர்வு பெற நல்ல வாய்ப்பு வரும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.
சிம்மம்:
பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது கூடாது. பெண்கள் அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.
கன்னி:
முக்கியமான பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் முன்னர் இருந்த குளறுபடி சரியாகும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். பிள்ளைகளால் உதவி உண்டு.
துலாம்:
தெய்வ அருள் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் அபிவிருத்தி ஏற்படும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். சுபசெய்தி வந்து சேரும்.
விருச்சிகம்:
நண்பரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூலம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். உறவினர் உதவி செய்வர்.
தனுசு:
சூழ்நிலை உணர்ந்து எவரிடமும் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
மகரம்:
குடும்ப விஷயம் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வது அவசியம். மிதமான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பெண்களுக்கு பொறுமை தேவை.