இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவர் ரயில் தாம் பார்த்த பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அவரை கண்டுபிடிக்க நகரம் முழுவதும் 4,000 போஸ்டர் பதித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொல்கத்தா நகரத்தை சேர்ந்த 29 வயதான பிஸ்வஜித் பொட்டார் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் தாராபித் பகுதி ரயிலில் பயணம் செய்துள்ளார், அப்போது இளம்பெண் ஒருவரை பெற்றோருடன் அந்த ரயிலில் பார்த்துள்ளார்.
முதல் பார்வையிலேயே அவர் தான் தமது வருங்கால மனைவி என முடிவு செய்த பிஸ்வஜித், அவரிடம் இருந்து தொலைபேசி எண்களை பெற முயற்சித்துள்ளார்.
ஆனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவருடனே இருந்ததால் இவருக்கு அந்த வாய்ப்பு அமையாமல் போனது, ஒருகட்டத்தில் உதட்டசைவால் அந்த இளம்பெண் இவருக்கு தமது தொலைபேசி எண்களை தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர் அந்த எண்களை தவறாக புரிந்து கொண்டதால், தொடர்பு கொள்ள முடியாமல் போனது, இதனிடையே அந்த பெண்ணும் பெற்றோரும் அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் ரயிலில் இருந்து இறங்கிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், மனம் தளராத பிஸ்வஜித் நூதன விளம்பரம் ஒன்றை மேற்கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இருவரும் முதன் முறையாக பார்த்த பகுதியில் உள்ள 6 கிலோ மீட்டர் தூரம், சுமார் 4,000 போஸ்டர்களை அச்சிட்டு பதித்துள்ளார் பிஸ்வஜித். மட்டுமின்றி அதே ரயிலில் அடிக்கடி பயணம் செய்து தமது காதலியை தேடியும் வருகிறார். ஒருநாள் கண்டிப்பாக அவரை கண்டுபிடித்து விடுவேன் என பிஸ்வஜித் நம்பிக்கையுடன் உள்ளார்.