அந்தரங்கம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் ரகசியமாக பேணிக்காக்க வேண்டிய ஒன்று.
அது ரகசியமாக இருப்பது தனிமனித வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. ரகசியம் வெளியாகும் நேரத்தில், பிரச்சனைகள் வாழ்க்கைக்குள் நுழைய ஆரம்பித்துவிடுகின்றன.
எந்த ஒரு மனிதனும் தங்களுடைய அந்தரங்கங்கள் மற்றவர்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், அதனையும் தாண்டி சென்றுவிட்டால் அது அவர்களது குடும்ப வாழ்வில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வாழ்க்கை நிலைகுலைந்துவிடும்.
எனவே, அந்தரங்கத்தை பகிர்ந்துகொள்வதும் ஆபத்து, அதனை காது கொடுத்து கேட்பதும் ஆபத்து.
அதுவும் குறிப்பாக, திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் வாழ்க்கையில் ஏதேனும் தவறு செய்திருந்தால், அந்த ரகசிய தகவலை நீங்கள் எதிர்கால வாழ்க்கை துணையிடம் கூற வேண்டிய அவசியமில்லை.
25 சதவீத ஆண்கள் தங்கள் துணையின் கடந்தகால அந்தரங்கத்தை கேட்டுவிட்டு, நம்முடைய துணை எவ்வளவு உண்மையாக இருக்கிறாள் என நினைப்பார்கள், ஆனால் 75 சதவீத ஆண்கள், அதனை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு இப்படி ஒரு பெண் தேவையில்லை என முடிவெடுத்துவிடுவார்கள்.
அதற்கு உதாரணமான சம்பவம் தான், திவ்யா – ராஜசேகர் திருமணம். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், தனது எதிர்கால துணையின் மீது நம்பிக்கை கொண்ட திவ்யா, தனது கடந்தகால வாழ்க்கையில் நடந்த சில அந்தரங்க ரகசியங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதனைகேட்டுவிட்டு, ஒன்றும் பேசாமல் எப்போதும் போல திவ்யாவுடன் பழகிவந்த ராஜசேகர், நாட்கள் நெருங்க தனது வாழ்க்கை துணையின் மீது நம்பிக்கை இழந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் கொண்டு அவருக்கு தினமும் தொல்லை கொடுத்து வந்தார்.
இதன் உச்சகட்டமாக திருமண நாளுக்கு 5 நாட்கள் இருக்கையில், நடந்தவை குறித்து திவ்யா வீட்டாரிடம் தெரிவித்து, எனக்கு இப்படிப்பட்ட பெண் தேவையில்லை என கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார்.
எனவே, கடந்தகாலம் என்பது கடந்துவிட்ட காலமாகவே போகட்டும், அதனை நிகழ்காலத்திற்கு கொண்டு எதிர்கால வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.