கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமிகளை தந்திரமாக ஏமாற்றி ஆபாச படம் எடுத்த கும்பலைச் சேர்ந்த ஏழு அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களை பயன்படுத்தும் சிறுமிகளை குறிவைத்து செயல்படும் இந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிறுமிகளை ஏமாற்ற ஒரு புதிய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட சிறுமிகளிடம் தங்களை அவர்களுடைய சம வயது சிறுவர்கள் போல் காட்டிக்கொண்டு அவர்களுடன் பழகுவார்கள்.
பின்பு சிறுமிகள் பாலுறவு செயல்களில் ஈடுபடும் வீடியோக்களை மெதுவாக அவர்களுக்கு அனுப்புவார்கள்.
அந்த சிறுமிகள் கெமரா முன்பு அப்படி செய்யும்போது நாமும் அப்படி செய்யலாமே என்னும் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டது.
சிறுமிகளுக்கு தங்களுக்கு அழுத்தம் கொடுப்பது பெரியவர்கள் என்பது தெரியாது, தங்களைப் போன்ற சிறுவர்களும் சிறுமியர்களும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.
அப்படி நம்பி அவர்கள் கெமரா முன்பு செய்யும் பாலியல் தொடர்பான விடயங்கள் பதிவு செய்யப்பட்டு பின்னர் தேவைப்படுவோருக்கு விற்கப்படும்.
இம்முறையில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 91 சிறுமியர் இந்த கூட்டத்தின் வலையில் விழுந்துள்ளனர்.
இந்த குற்றம் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தென் கரோலினாவைச் சேர்ந்த Brandon Gresette (33) என்பவனுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு தண்டனைக்காலம் முடிந்த பின்னரும் வாழ்நாள் முழுவதும் அவன் பொலிஸ் கண்காணிப்பிலேயே வாழ நேரிடும்.
மேலும் 10,000 முதல் 98,715 டொலர்கள் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க சில குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.