Loading...
இரத்தினபுரி மாவட்டத்தில் மீண்டும் டெங்குத் தொற்று பரவ ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இதுவரையில் சுமார் ஆயிரத்து 656 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நிவித்திகலை பிரதேச செயலகப்பிரிவில் 232 பேர் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
குருவிட்ட செயலகப் பிரிவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எகலியகொடைவில் 161 பேரும், எலபாத்த பகுதியில் 159 பேரும், இரத்தினபுரி நகரப் பகுதியில் 124 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 139 பேரும் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
Loading...