2016ம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து, மெகா ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் பல விருதுகள் பெற்ற படம் யுடர்ன். தற்போது இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இது இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாகிறது.Samantha criticizes Uturn director
இயக்குனர் பவன்குமாரை தாம் மிகவும் வெறுப்பதாகவும், அவரைக் கொல்ல படம் ரிலீசாகும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்தார் சமந்தா.
இப்படத்தில் சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருக்க கோ.தனஞ்ஜெயன் நிறுவனமான கிரியேட்டிவ் எண்டர்பிரைசிஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 13ம் திகதி வெளியாகவுள்ளது.
நேற்று சென்னையில் யுடர்ன் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை சமந்தா வருமாறு கூறினார், “யுடர்ன் படத்தை கன்னடத்தில் பார்த்தபோதே, இதனை ரீமேக் செய்தால் நான் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டதைப் போலவே, பவன்குமாரும் என்னை அணுகினார். ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறேன்,” என்றார்.
பின்னர், பவன்குமார் பற்றி சமந்தா காரசாரமான டுவிட்கள் வெளியிடுவது பற்றியும், பதிலுக்கு பவன்குமாரும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சமந்தாவின் சொதப்பல் காட்சிகளை வெளியிட்டு பழி வாங்குவது பற்றியும் கேட்ட போது.
அதற்கு சிரித்த சமந்தா, ‘ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கிறோம். பட ரிலீசுக்காகத் தான் காத்திருக்கிறேன். பிறகு அவரைக் கொல்லப் போகிறேன்” என ஜாலியாக பதிலளித்தார்.