அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சம்பள அதிகரிப்பு இடம்பெறவுள்ளது.
இதன்கீழ் அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
விசேட சம்பளம் ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள திருத்தம் ஒன்று மேற்கொள்வதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.