வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருக்க உறுதியாக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
.
தோல்வியில் முடிந்தது கடந்த டிசம்பர் 7, 1995ல் நாசா கலிலியோ என்ற சோதனை சாதனத்தை விண்ணுக்கு அனுப்பியது. வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கி 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது.
ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பது எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரிய சிகப்பு புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.
இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது.
இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.
சிவப்பு புள்ளியில் உள்ளது அதன்படி, வியாழனில், பெரிய அளவில் செந்நிற புள்ளி ஒன்றுள்ளது. இதன் அளவு ஆசிய கண்டத்தை விட பெரிதாக இருக்கும்.
இது முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் இதை கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு தண்ணீர் தற்போது, வியாழன் கிரகத்தில் எவ்வளவு தண்ணீர் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்.
மேலும், மொத்தமாக அந்த கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றுள்ளனர்