நடிகர் சிம்பு வாங்கிய முற்பணத்தை திரும்பக் கொடுக்காவிட்டால், அனைத்து சொத்துக்கள் முடக்கப்படும் என நீதிமன்றம் சிம்புவை எச்சரித்துள்ளது.
2013ஆம் ஆண்டு ஃபேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டது. அதற்காக 50 லட்சம் ரூபாய் பணம் முற்பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால் இன்றுவரை அந்த படத்திற்கான கால்ஷீட்டை கொடுக்காமல் சிம்பு அலைக்கழிப்பதாக அவர் மீது மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.
கொடுத்த பணத்திற்கு வட்டி போட்டு அசலோடு சேர்த்து 83.50 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையென்றால் அவரது கார், செல்போன் என அனைத்தையும் ஜப்தி செய்யவேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 4 வாரத்திற்குள் சிம்பு இதற்கு பதிலளிக்க தவறினால் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளது.