மட்டக்களப்பு, ஆயித்திய மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வோருக்கு அரச பேருந்துகளில் அளவுக்கு மீறிய கட்டணங்கள் அறவிடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விஷேட சேவை என பேருந்து சேவையை ஒழுங்குபடுத்தி விட்டு இவ்வாறு கண்ணைப் பிடுங்கும் கட்டணம் அறவிடுவது நியாயமா எனவும் பயணி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்படி குறித்த ஆலயத்திற்கு செல்வதற்காக மக்களுக்கு விஷேட சேவை என தெரிவித்து ஒரு நபரிற்கு 65 ரூபா அறவிடப்படுவதாகவும், சாதாரணமாக குறித்த பகுதிக்கு செல்வதற்கு 45 ரூபா அளவிலேயே கட்டணம் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மக்களுக்கு சேவை வழங்குவதன் பொருட்டு விஷேட சேவை என கூறிக்கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், 18km தூரத்திற்கு 65/- ரூபாய் அறவிடுவது பற்றிய விளக்கம் எமக்கு தேவை எனவும் விஷேட சேவை என்பது கட்டணம் கூட்டி அறவிடுவதா ஐயாமாரே? எனவும் சிலர் குறைபட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.