புத்தளம் மாவட்டம் சிலாபம் நகர கடலில் பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த போது அச்சமயம் வந்த பெரும் அலையால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு முழ்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் பமுணாகொட்டு, வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த மனோரி தக்ஷிலா (33) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், கடலில் அடித்துச் சென்ற பெண்ணைக் காப்பாற்ற முயற்சியில், நான்கு மீனவர்கள் துரிதமாக கடலில் குதித்து அவரை கரைக்குக் கொண்டு வந்த போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
இச்சம்பவம் இடம்பெற்ற சமயம் அக்கடற்கரையில் அதிக எண்ணிக்கையானோர் அலைகளை மிதித்து விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அலையில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு. மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.