கோடை காலத்தில் வியர்வை நாற்றத்தினால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இயற்கையான முறைகளில் எப்படி தீர்வு காண்பது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
மழையுடனான காலநிலைகளை விடவும் கோடை வெப்பத்தால் உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறும்.
வியர்வை நாற்றத்திற்கு காரணம் என்ன?
- சுத்தமாக இல்லை என்றால் உடல்ல நாற்றம் அடிக்கும்
- மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
- இரண்டு முறையாவது குளிப்பது ஆரோக்கியம் தரும்.
- அப்படி செய்யவில்லை என்றா வியர்வை துர்நாற்றம் ஏற்படும்
- துர்நாற்றத்தினால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும்.
போக்குவதற்கு என்ன செய்யலாம்?
முறை – 01
ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் எடுத்து கொள்ள வேண்டும்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து கொள்ள வேண்டும்.
இரண்டினையும் கலந்து அதை அக்குளில் தடவ வேண்டும்.
சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்துவர வேண்டும்.
துர்நாற்றம் இல்லாமல் போய்விடும்.
முறை – 02
ஆப்பிள் சீடர் வினிகரை சிறிதளவு எடுத்து கொள்ளவும்
அதனை பஞ்சில் நனைத்து கொள்ள வேண்டும்.
அதை அக்குளில் தடவ வேண்டும்.
2 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் இரண்டு முறை செய்தால் நல்ல பலன் இருக்கும்.
முறை – 03
குளிக்கும் முன் துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து கொள்ள வேண்டும்.
அது காய்ந்த பிறகு குளிக்க வேண்டும்.
தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் குறையும்.
முறை – 04
சந்தன பவுடரை சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்.
அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
அதனை அக்குளில் தடவி நன்கு காய வைத்து விட வேண்டும்
பின்னர் குளிர்ந்த நீரில் சுத்தப்படுத்தவும்.
இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் வியர்வை நாற்றம் இல்லாமல் போய்விடும்.
அத்துடன் அக்குளில் கருமை குணமாகும்.