பிரித்தானியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக Edinburgh நகரமும், பாதுகாப்பற்ற நகரமாக Birmingham-ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பொதுமக்கள் வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான நகரங்கள் பற்றி ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது.
அதில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஏற்ற நகரமாக Edinburgh நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் 90 சதவிகிதம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் எனவும், வெறும் 16 சதவிகிதம் மட்டுமே குற்றச்செயல்கள் நடைபெறுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, Bristol, Brighton & Hove, Southampton மற்றும் Cambridge என முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது.
அதே சமயம் Birmingham பகுதியில் வாழும் மக்களில் 42 சதவிகிதத்தினர் நாளுக்கு நாள் ஆபத்தில் உள்ளதை போல் உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதிலும் அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் இருந்தாலும் கூட பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பற்ற நகரங்களில் Leicester, Manchester, London மற்றும் Sheffield என முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
இவற்றில் அதிக பாதுகாப்பற்ற நகரங்கள் என்று கண்டறியப்பட்டுள்ள பகுதிகளிலேயே அதிக அளவிலான தமிழர்கள் வாழுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதிகளில் உளள கடைகளில் அனேமானவை தமிழருக்குச் சொந்தானவை என்பதுடன், கடைகளில் கொள்ளைகள், வன்முறைகள் அடிக்கடி இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.