Loading...
பிரான்சில் மூன்று வயது சிறுமி ஒருவர் மூன்றாவது தளத்தில் இருந்து தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
பிரான்சின் Les Mureaux பகுதியின் Rue Françoise Dolto விதியில் அமைந்துள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் 3 வயது சிறுமி ஒருவர் தன் 6 வயது சகோதரனுடன் மூன்றாவது தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனால் அவர் உடனடியாக தலைநகர் பாரிசில் உள்ள Necker மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
Loading...
அப்போது அவருக்கு மணிக்கட்டில் மட்டுமே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு எந்த ஒரு பயமும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது
Loading...