இந்தியாவின் கொல்கத்தாவின் புறநகர்பகுதியொன்றில் பிளாஸ்டிக் பைகளில் இருந்து 14 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிதோப்பூர் எனும் பகுதியிலேயே குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்மோகன் ராய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்றவேளை குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள குழந்தைகளின் சடலங்களில் பெரும்பாலானவை அழுகிய நிலையிலும் சில உடல்கள் பாதி அழுகிய நிலையிலும் உள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் உடல்கள் 14 வெவ்வேறு பொலித்தீன் பைகள் காணப்பட்டன, உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசாமலிருப்பதற்காக இரசாயனபொருளொன்றை பயன்படுத்தியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
உடல்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் தாங்கள் துர்நாற்றம் எதனையும் உணர்ந்ததில்லை இதன் காரணமாக அந்த நிலத்தில் மர்ம விடயங்கள் இடம்பெறுகின்றன என சந்தேகிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உடல்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் கருக்கலைப்பு நிலையமொன்று இயங்குவதாகவும் அவர்களே இந்த பாதகச்செயலிற்கு காரணமாகயிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.