வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக தொடர்ந்தும் தாமதமாகும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
இந்த வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதால், பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிடம் வழங்கப்பட்ட போதும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில், 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் ஜனாதிபதியும் தனக்கு ஆதரவளித்துள்ளதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.