நடிகை குசும் பெரேரா மற்றும் பிரபல ஓவியர் லெஸ்லி பெரேரா ஆகியோரின் இளைய புதல்வி ஹர்ஷிகா பெரேரா மற்றும் தனுஷ்க பியமால் ஆகியோர் பதிவு திருமணம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது
கடந்த 30 ஆம் திகதி நடந்த இந்த பதிவு திருமணம் , கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி பதிவு திருமணத்திற்கான சாட்சியாளராக கையெழுத்திட்டுள்ளார்.
இந்த மணமக்களின் சம்பிரதாயபூர்வமான திருமணம் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடந்த சத்துர சேனாரத்னவின் திருமணம் வைவபத்தை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அங்கு நடைபெற்ற திருமண வைபவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கத்தில் சார்பில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த பதிவு திருமணம் நடைபெற்றமை குறிப்பிட்டுள்ளது.