கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பை பிறீமா நிறுவனம் எழுத்து மூலம் உறுதிப்படுத்தவில்லை. இதனால் பேக்கரியில் தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு விலையை அதிகரிக்கவில்லையென அச்சங்கத்தின் தலைவர் எஸ்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பாக நடைபெறவுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மாவின் விலை 5.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் சில்லறை விலை 95.00 ரூபாவிலிருந்து 100.00 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.