பொலிவுட், ஹொலிவுட் என திரை உலகில் பிரபலமாக மின்னும் நட்சத்திரங்கள் சிலர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து மரணத்தை தழுவியுள்ளனர்.
சில நடிகைகள் மட்டுமே விழிப்புணர்வோடு செயல்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்ரீ வித்யா எழுபது, எண்பதுகளில் கதாநாயகியாக நடித்த ஸ்ரீ வித்யா பின்னர் அம்மா, அக்கா, அண்ணியாக நடித்து அசத்தியவர்.
மார்பகப் புற்றுநோய் தாக்கி 2006ம் ஆண்டு உயிரிழந்தார்.
கவுதமி
ரஜினி கமல் என பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை கவுதமி.
திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. தன்னம்பிக்கையுடன் இதை எதிர்த்து போராடியமை குறிப்பிடத்தக்கது.
ஏஞ்சலீனா ஜோலி
ஹொலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி மார்பகப் புற்றுநோய் தாக்குதலினால் தனது மார்பகத்தை இழந்துள்ளார்.
ஆனாலும் தன்னம்பிக்கை தளராமல் மீண்டும் அதே ஆக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மனீஷா கொய்ராலா
இதேபோல் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மனிஷா கொய்ராலா.
அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு மும்பை திரும்பினார்.