சென்னை குன்றத்தூரில் பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு வெளிநாடு தப்பி செல்ல அபிராமி தாலி சங்கிலியை அடகு வைத்து பணம் தேற்றியுள்ள சம்பவம் பொலிசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட முறை தவறிய தொடர்பால் தமது இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இதையடுத்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு அபிராமியிடம் பணம் இல்லை. ஏற்கனவே கணவரையே தூக்கி எறிய துணிந்த அபிராமி தனது தாலி சங்கிலியை விற்று பணத்தை தயார் செய்திருந்தார்.
அந்த பணத்தை எடுத்து கொண்டு கோயம்பேடு சென்ற அபிராமி பேருந்து மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு தப்பி சென்றுவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இரண்டு தனிப்படைகளை அமைத்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடைசியாக அபிராமியின் செல்போன் சிக்னல் கோயம்பேடு பேருந்து நிலையத்தை காட்டியது.
இதைவைத்து இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு அபிராமி வெளியூருக்கு தப்பித்துள்ளார் என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
இதனிடையே வீட்டிலிருந்து அபிராமியை அழைத்து சென்ற கள்ளக் காதலன் சுந்தரம் அபிராமியை நாகர் கோவிலுக்கு பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு மீண்டும் பிரியாணி கடைக்கு வந்துள்ளார்.
இந்த வழக்கில் பெற்ற குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்த அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக்காதலன் சுந்தரம் 2-ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் குழந்தைகள் இல்லை.