அமெரிக்காவில் வசித்து வரும் நடிகை பத்மா லட்சுமி தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னையை பிறப்பிடமாக கொண்ட இவர், அமெரிக்காவில் நடிகை, மொடலாக இருக்கிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை தனது 48வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனால் தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் 20 வயதில் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டேன்.
ஆனால், திருமணமாகி குழந்தைப்பேறு என எனது உடல் மாற்றம் அடைந்தாலும், தற்போது 48 வயதிலும் எனது உடல் குறித்து நான் பெருமையாக உணர்கிறேன், எனவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் அரைநிர்வாணமாக குளியலறை காட்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.