பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருங்காட்சியத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிறநாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமாகின.
இந்நிலையில் அருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் என்றும், யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
BREAKING: The National Museum of #Brazil in #Rio is completely consumed in fire. Founded in 1818, the museum is the holder of over 20 million items, including mummies, meteorites, insects, & fossils. So sad to see history in flames 🙁
Video from @g1 live feed#museunacional pic.twitter.com/eCm8G6gKwA
— Justin Fleenor ? (@JustinFleenor) September 3, 2018
இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
பண்டைய காலத்தில் போர்ச்சுகீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.