இந்தியாவின் டெல்லியில் காதலிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்த காதலன் காதலியால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஷில் சிங் என்பவர் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் இது குறித்து பொலிசிடம் அவர் தந்தை ரிஷி புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், சுஷில், டோலி சவுத்தரி என்ற பெண்ணுடன் அதிகம் போனில் பேசியது தெரியவந்தது.
மேலும் டோலியும், சுஷிலும் காதலர்கள் என்பதையும் கண்டுப்பிடித்தனர்.
இது குறித்து டோலியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அவர் டோலியை கொலை செய்தது தெரியவந்தது.
பொலிசார் கூறுகையில், டோலியும், சுஷிலும் காதலித்து வந்த நிலையில் மோகித் என்பவருடன் டோலிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொடர்பை அறிந்த மோகித்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இத்தொடர்பை சுஷில் கண்டுப்பிடித்துள்ளார், இதையடுத்து மோகித்துடன் உள்ள தொடர்பை விட்டுவிடும் படி டோலியிடம் சுஷில் கூறியுள்ளார்.
அப்படி இல்லையெனில் என்னுடன் நீ இருந்த நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த டோலி, சுஷிலுக்கு மயக்க மாத்திரை கொடுத்துள்ளார்.
பின்னர் மோகித்தை அங்கு வரவழைத்த டோலி அவர் உதவியுடன் சுஷிலை தூக்கி கொண்டு போய் நதியில் தூக்கி போட்டு கொன்றதாக கூறியுள்ளனர்.