டெல்லியில் 27 வயதான அதிபா என்பவர் தனது 7 மாத குழந்தைதை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
தனது குழந்தை மயக்கமடைந்துவிட்டதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அதிபா கொண்டுசென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார், மேலும் குழந்தையின் கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்து தாயிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அதிபாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், இக்குழந்தை பிறந்தது முதல் எங்கள் குடும்பத்தில் கஷ்டமாக இருந்தது.
துரதிஷ்டத்தை இக்குழந்தை கொண்டுவந்தது, பணத்திற்கே கஷ்டமாக இருந்த காரணத்தால் அதிர்ஷ்டமில்லாத குழந்தை என தனது துப்பட்டாவில் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
தற்போது அதிபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.