இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் எனது பெயரை மாற்றியுள்ளார். தமிழ் மீதான பற்றினை வெளிப்படுத்தும் வகையில் மாற்றம் செய்துள்ளார்.
பல படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், திரிஷா இல்லனா நயன்தாரா படம் ஹீரோவாக அறிமுகமானார்.
அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
சமூக அக்கறை கொண்ட பல சமூக சேவைகளை செய்து வருகின்றார்.
தற்போது அவர் ஜி.வி என இனிஷியலை கோ.வெ என மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்..
உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்…இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் … #தமிழ்விதியெனசெய் pic.twitter.com/miSackRIOk
— G.V.Prakash Kumar (@gvprakash) September 2, 2018