Loading...
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் அதில் சிக்கிய ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரியவருகிறது.
மிதிவெடி அகற்றுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரியவருகிறது.
Loading...
சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Loading...