தினம் தினம் திருநாளே!..
மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.
அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
மேஷம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமுகமாக நடைபெறும்.. பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
ரிஷபம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். எதிரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
மிதுனம்
புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. எதிர்பாராத செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாலையில் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமார்தான். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கடகம்
மகிழ்ச்சியான நாள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் உறவி னர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சிம்மம்
மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.
கன்னி
தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
விருச்சிகம்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு
மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
மகரம்
மனதில் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்த படியே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
கும்பம்
திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நண்பர் களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர் களால் செலவுகளும் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
மீனம்
உற்சாகமான நாள். வாழ்க்கைத்துணை வழியில் சுபச் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.