சர்கார் படம் விஜய் நடிப்பில் பிரமாண்டமான முறையில் உருவாகிவரும் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களில் எதாவது ஒன்றில் விஜய் பாடுவாரா? என்பது தான் விஜய் ரசிகர்கள் பெரும்பாலனோரின் கேள்வியாக உள்ளது.
துப்பாக்கி படத்தில் இருந்து பைரவா படம் வரை தொடர்ச்சியாக தனது படங்களில் பாடி வந்த விஜய் மெர்சல் படத்தில் பாடவில்லை. இது, மெர்சல் எத்தனை சாதனைகளை புரிந்தாலும் ரசிகர்கள் மனதில் சிறிய கவலையை ஏற்படுத்தியவாறு தான் இருந்தது.
சரி அந்த படத்தில் தான் பாடவில்லை, சர்காரிலாவது பாடுவாரா என்றால், நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி பாட மாட்டார் என்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
சர்கார் மிக அதிக அரசியல் கதைக்களத்தை கொண்ட படம் என்பதும் ஆடியோ வெளியீடு மிக நெருக்கத்தில் வந்துவிட்டதும் தான் இந்த வருத்தமான செய்திக்கு காரணங்களாக உள்ளன