இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமலாபுரத்தை சேர்ந்தவர் பெருமுல்லா. இவருக்கும் அருணாதேவி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணம் ஆன ஒரு மாதத்துக்கு பின்னர், பெருமுல்லா தான் பணிபுரியும் நாடான பிரான்ஸுக்கு பெற்றோருடன் சென்றுவிட்டார்.
அருணாதேவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார் பெருமுல்லா.
இந்நிலையில் பிரான்ஸிலிருந்து அருணாதேவிக்கு தினமும் போன் செய்த பெருமுல்லா அவரிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார்.
பத்து லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் தன்னுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியுள்ளார்.
பெருமுல்லாவின் பெற்றோரும் அருணாதேவியை மிரட்டிய நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பெருமுல்லாவின் சகோதரியும் துன்புறுத்தியுள்ளார்.
கணவர் மற்றும் குடும்பத்தினரின் துன்புறுத்தலால் மனமுடைந்த அருணாதேவி தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதையடுத்து கணவர் குடும்பத்தாரே அருணாதேவியின் இறப்புக்கு காரணம் என அவர் தந்தை ரயூரி பொலிசில் புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.