ஆரோக்கியமாக பராமரிக்கப்படும் முகம் அனைவரையும் கவரும். நமது அழகைப் பாதுகாப்பதில் உணவுப் பழக்கம், ஃலைப் ஸ்டைல் ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவர்கள் இந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை இரண்டு வருடங்கள் பின்பற்றினால் தலைமுடி கொட்டிப்போதல், கண்களில் குழி விழுதல், கண்களைச் சுற்றிக் கருவளையம், இளநரை போன்ற காரணங்களால் இருபது, இருபத்தி ஐந்து வயதிலேயே நாற்பது வயதைப் போல தோற்றம் அளிப்பார்கள். உடல் சுருக்கம் மற்றும் மார்பகம் தளர்ந்து போதல் போன்றவையும் ஏற்படலாம். அதனால் உணவைத் தவிர்ப்பதை விட்டு முறையான உணவுப் பழக்கவழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
அழகை பராமரிப்பதில் உணவை அடுத்து சுத்தம் பெரும் பங்கு வகிக்கிறது. நம் உடம்பில் 4 வாரங்களுக்கு ஒரு முறை பழைய செல்கள் இறந்து புது செல்கள் உற்பத்தியாகும். தலையில் நாள்தோறும் புது செல்கள் உருவாகும். உதிர்ந்த செல்களை நீக்கினால்தான் புது செல்கள் நன்கு வளர்ச்சி அடையும். அதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது அவசியம். மண்டையோடு சுத்தமாக இல்லாமல் போனால் தலையில் பொடுகு அதிகரிக்கும்.
அதனால் முடி கொட்டும். பொடுகை சொறியும்போது முகத்தில் உதிர்ந்தால் சிலருக்கு முகத்தில் பொரி பொரியாக ஏற்படும். பொடுகினால் ஏற்படும் அந்த மாற்றம் முக அழகைக்கெடுக்கும். தலை சுத்தமாக இல்லாவிட்டால் முக அழகு பாதிக்கப்படும். தலைமுடி சுத்தத்தைப் பேணுவது போல் சருமத்தையும் பராமரிப்பதும் அவசியம். அதற்கு நம் சருமம் எப்படிப்பட்டது என்று நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.
அதாவது எண்ணெய்ப் பசை கொண்ட சருமமா? உலர்ந்த சருமமா அல்லது சென்ஸிடிவ்வான சருமமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரும் அழகு சாதனப்பொருட்களோ, நம் தோழிகள் பயன்படுத்தும் அழகுப்பொருட்களோ நமக்கும் பொருந்தும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சருமம் மாறுபடும். நம் சருமத்துக்குத் தகுந்த அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அதனால் நமது குடும்ப மருத்துவரிடமோ, ப்யூட்டிஷியன்களிடமோ சென்று நம் சருமம் எப்படிப்பட்டது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கு ஃபேஷியல் செய்து கொள்ளலாம். நமது தோலுக்கு தகுந்த மாதிரியான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். மாதத்திற்கொரு முறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பார்லருக்கும் செல்லலாம். ஆனால் நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும். அந்த விஷயத்தில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
பணத்துக்காகப் பார்த்தால் நம் சருமத்தின் அழகு பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் வாங்கும் காஸ்மெட்டிக்ஸ் தரமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வீட்டிலும் சருமப் பராமரிப்பு மேற்கொள்ளலாம்.