தமிழகத்தில் கள்ளக்காதலனுக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்த தாய் அபிராமியின் அரக்க மனம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அபிராமி, தனது கணவர் நல்லவர், நான் தான் கெட்டவள். எனது குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை, இருப்பினும் காதல் எண் கண்களை மறைத்துவிட்டது என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அபிராமி குறித்த தகவல்கள்
சென்னையில் உள்ள ஹோட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றினார். அந்த ஹோட்டலில் கடலூரைச் சேர்ந்த விஜய் வேலைபார்த்தபோது 8 வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பிறகு இருவீட்டினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வரவேற்பாளராக அபிராமி பணியாற்றியதால் தன்னை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்.
அலங்காரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதனால், அடிக்கடி அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு அபிராமி வேலைக்குச் செல்லவில்லை. விஜய் மட்டும் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.
மேலும், திருமணத்திற்கு பின்னரும் தன்னை அழகாக வைத்துக்கொள்வதில் அதிக முனைப்புடன் இருந்த அபிராமி, தனது அழகை யாராவது புகழ்ந்துவிட்டால் அதிக சந்தோஷப்படுவாராம்.
ஆனால், தனது அழகை ரசிக்க வேண்டிய கணவரே அதனை கண்டுகொள்ளாத காரணத்தால், மனம் உடைந்துள்ளார். இவரின் அழகை பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவர் வர்ணித்த காரணத்தால் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில் கள்ளக்காதலர்களாக மாறியுள்ளனர்.
அபிராமி தன்னுடைய பொறுப்புகளை மறந்துவிட்டதே இதற்குக் காரணம். அபிராமி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய், விஜய்க்கு மனைவி என்பதை உணர்ந்திருந்தால் இந்தத் தவற்றை அவர் செய்திருக்க மாட்டார்.