கடந்த 30ம் திகதி நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேரூந்து வண்டியொன்றில் நுவரெலியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி புஸ்ஸல்லாவவிற்கு படிப்பதற்காக தங்குமிடத்திற்கு அனுப்பிவைக்க பட்டார்.
ஆனால் அச்சிறுமியை புஸ்ஸல்லாவையில் இறங்க விடாமல் பேரூந்து சாரதியும், நடத்துனரும் தடுத்துள்ளனர்.
பின் கண்டிக்குச் சென்று கண்டியில் இருந்து நுவரெலியா வரும் போது புஸ்ஸல்லாவ நகரில் அச்சிறுமியை இறக்காமல் மீண்டும் நுவரெலியாவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
நுவரெலியாவில் வழமையாக பேரூந்துகள் நிறுத்தி வைக்கும் இடத்தில் நிறுத்தி அம்மாணவியை வீட்டுக்குச் செல்ல விடாமல் பேரூந்திலேயே இரவு முழுவதும் தங்க வைத்து துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் 30ம் திகதி மாலை தாய் தங்குமிடத்திற்கு தொலைபேசி மூலம் விசாரித்தபோது, மாணவி இன்னும் வரவில்லை என்று கூறிய பின் நுவரெலியா காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது
பின் 31ம் திகதி காலை சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்த பின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
பின்னர், நுவரெலியா காவற்துறையில் மீண்டும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து , மாணவி நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அங்கு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் 31ம் திகதி பேருந்து சாரதியையும் நடத்துனரையும் கைது செய்து கடந்த 1ம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது, பதில் நீதவான் விஜேவிக்ரம எதிர்வரும் 14ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
ஆரம்பகட்ட விசாரணையின் போது கொத்மலையில் வைத்து பேரூந்தின் நடத்துனர் இறங்கி விட்டாதாகவும் அந்நடத்துனர் சாரதிக்கு மது போத்தல் வாங்கி கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேற் கூறப்பட்ட சந்தேகநபர்களான றம்பொடையைச் சேர்ந்த என்.கே. ரத்னவீர தென்னகோன் வயது 33, கந்தப்பளையைச் சேரந்த காசி விஸ்வநாதன் வயது 30 ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.