ரொறொன்ரோவில் நினைவஞ்சலி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு குடும்பத்துடன் திரும்பிய நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Markham பகுதியை சேர்ந்த 30 வயதான மைக்கேல் லூயிஸ் என்பவரே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
ஞாயிறன்று மாலை Coronation Park பகுதியில் நினைஞ்சலி கூட்டம் ஒன்றில் தமது 2 பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது நான்குபேர் லூயிஸை அணுகி விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென்று அதில் ஒருவர் துப்பாக்கியை உருவி லூயிஸ் மீது சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த லூயிஸ் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வார இறுதி நாளை கொண்டாடும் வகையில் பல குடும்பத்தினர் அந்த பூங்காவில் கூடியிருந்த ஒரு பரபரப்பான நாள் அது எனக் கூறும் பொலிஸ் அதிகாரிகள்,
குறித்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் Greater Toronto பகுதியில் நடத்தப்படும் நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என கூறும் பொலிசார்,
கொலைகாரர்கள் லூயிஸுக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் எனவும், சம்பவம் நடந்தபோது சுமார் 30-ல் இருந்து 40 பேர் அந்த பூங்காவில் இருந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்ச்டு நடந்த உடனே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தினிடையே அந்த கொலைகாரர்கள் மாயமாகியுள்ளனர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.