Loading...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றும் உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Loading...
இதன்போது காயமடைந்த சரசாலையைச் சேர்ந்த மு. சிவசங்கர் என்பவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சரசாலையை சேர்ந்த 55 வயதுடைய க. விக்னேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வானின் சாரதி விசாரணைக்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Loading...