ஜெயம் ரவி ரவி ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்த சதா, ஷங்கர் இயக்கத்தில் ‘அந்நியன்’ படத்தின் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தாலும், அவரது அடுத்தடுத்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சதா, சில கன்னடப் படங்களில், அவ்வபோது ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்து வந்தவர், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘எலி’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ‘டார்ச்லைட்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ரித்விகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அப்துல் மஜீத் இயக்கியிருக்கும் இப்படம் இம்மாதம் வெளியாக இருந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் மீது சதா, நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, சதாவுக்கு பேசப்பட்ட சம்பள தொகையில், சில லட்சங்களை இயக்குநர் அப்துல் மஜீத் பாக்கி வைத்துவிட்டாராம். படம் முடிந்து ரிலிஸாகும் போது பாக்கி தொகையை கொடுத்து விடுகிறேன், என்று கூறியவர், படத்தை இம்மாதம் 7 ஆம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டாலும், சதாவின் சம்பள பாக்கி குறித்து எதுவும் பேசவில்லையாம்.
பொருத்து பொருத்து பார்த்த சதா, இதை இப்படியே விட்டா வேலைக்காகாது, என்று நினைத்து நடிகர்கள் சங்கத்தில் இயக்குநர் அப்துல் மஜீத் மீது புகார் அளிக்க, நடிகர் சங்க தலைவர் நாசர் இயக்குநர் மஜீத்தை அழைத்து பேசியிருக்கிறார். இதையடுத்து நடைபெற்ற பஞ்சாயத்தில், சதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை முழுவதுமாக செட்டில் செய்துவிட்ட பிறகே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும், என்று நடிகர் சங்க தலைவர் கராராக கூறிவிட்டாராம்.
இது பக்கம் இருக்க, சிலர் படம் எடுத்தால் இருக்கும் வீட்டை விற்பதை தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், இயக்குநர் மஜித்தோ, ‘டார்ச்லைட்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில், தனது சொந்த ஊரில் இரண்டு வீடுகளை புதிதாக காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.