தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பூபதிஸ் ஷீல்டுடெயில் (Bhupathy’s shield tail) எனும் புதிய பாம்பினம் உலகின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் உயிரின வகைப் பாட்டுக்குத் தரவு போதாமை என்ற வகைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளது
இவ்வகையான அபூர்வ பாம்பு தற்பொழுது தமிழ்நாட்டின் ஆனைகட்டி மலைகளில் (Anaikatty hills) மட்டுமே வசிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இலையுதிர் வகை தாவரங்கள் (deciduous type of vegetation) நிரம்பிய பகுதியாக குறிப்பிடப்படும் இந்த ஆனைகட்டி மலைகளானது மேற்குத் தொடர்ச்சி மலையிலே முக்கியமான வனப்பகுதியாகும்.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி அபூர்வ வகையைச் சேர்ந்த பாம்பிற்கு பூபதி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குறிப்பிடத்தகு ஊர்வன மற்றும் நீர்நில வாழ் விலங்கின இந்திய ஆராய்ச்சியாளரான (Indian herpetologist) டாக்டர் சுப்ரமணியன் பூபதி என்பவரைக் கௌரவிக்குமுகமாகவே இந்த அபூர்வ வகைப் பாம்பினத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அகன்ற மற்றும் நீண்ட தலையினையும் கவசம் கொண்ட வாலையும் கொண்டதனால் இந்த பாம்பு வேறு பாம்பினங்களிலிருந்து வேறுபடுகின்றது.
தற்பொழுது ஒருவகைப் பூஞ்சை நோயால் இந்த பாம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் சர்வதேச இயற்கைப் பன்னாட்டு பாதுகாப்பு சங்கத்தின் (IUCN-International Union for Conservation of Nature) அச்சறுத்தப்பட்ட இனங்களினுடைய சிவப்புப் பட்டியலில் (IUCN Red list of threatened species) வகைப்பாட்டிற்கு “தரவு போதாமை” (data deficient) உடைய இனமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பூபதி என்பவரது பெயரைக் கொண்ட இந்த புதிய வகைப் பாம்புகளைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.