பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இளம் தலை முறையினர் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிட்டது. தமிழ், தெலுங்கு இரண்டிலும் தற்போது சீசன் 2 போய்க்கொண்டிருக்கிறது.
அண்மையில் தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளர்கள் கீதா மாதுரி மற்றும் தனிஷ் விசயத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரபல நடிகர் நானி பாகுபாடு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால் சகபோட்டியாளர்கள் மட்டும்மல்ல ரசிகர்கள் மத்தியிலும் குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளது. ஏற்கனவே நாம் ஏன் இதில் கலந்துகொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும் என்ற எண்ணம் போட்டியாளர்கள் மத்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில் வெற்றியாளர் யார் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மோசடிக்கு நடுவே யேன் ஓட்டெடுப்பு நடத்துகிறார்கள் என கருத்து நிலவிவருகிறது.
இந்நிலையில் நானி குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் பிக்பாஸ் குழு நான் விளக்கம் அளிக்க தேவையில்லை என நம்புகிறது. ஆனால் என்னால் எப்படி இருக்க முடியும்.
பிக்பாஸில் ஒரு சில விசயங்களுக்கு பதில் தருகிறேன். இதுவே என கடைசி பதில். இதில் யார் இருப்பார்கள், யார் போவார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கு Favourite இருக்கிறது.
எனக்கு எல்லோருமே ஒன்று தான். சிறந்த போட்டியாளர் வெற்றி பெறுவார். குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்க போவதில்லை. மேலும் அதெல்லாம் என்னை சிறந்த முடிவை எடுக்க வைக்கும் என கூறியுள்ளார்.