ராஜஸ்தான் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த காரணத்தினால் காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய கொன்றதோடு, காதலியின் அம்மாவையும் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சாஹில் கான் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாட்களாக அப்பகுதியை சேர்ந்த Khushnasiba Bano (21) என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த சாஹில், தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு Khushnasiba-விடம் கூறியுள்ளார்.
ஆனால் Khushnasiba இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, என்னுடைய அம்மா, அப்பா கூறுபவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாஹில், கடந்த சனிக்கிழமையன்று மது அருந்திய நிலையில் Khushnasiba வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த Khushnasiba-வை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே Khushnasiba சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
அந்த சமயம் மகளை காப்பாற்ற முயன்ற அவருடைய தாய் Akhtar Bano-வையும், சாஹில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதற்கிடையில் அம்மா அலறும் சத்தம் கேட்டு கீழே ஓடிவந்த Khushnasiba-வின் தம்பி, ரத்த வெள்ளத்தில் அம்மா கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தான்.
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Akhtar தீவிரமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி சாஹிலையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.